அதிருப்தியில் ஸ்ரேயாஸ் ஐயர்... அணியிலிருந்து விலகல்? யாருமே எதிர்பார்க்காத சம்பவம்!
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், வீரர்களை தக்க வைக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எவ்வளவு சம்பளம் வழங்கும் என்ற கேள்வி எழுந்தது.
எனினும், கொல்கத்தா அணி நிர்வாகம் அவருக்கு 14 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்களான ஆண்ட்ரூ ரசூல் மற்றும் சுனில் நரேன் ஆகியோருக்கு 18 கோடி ரூபாய் மற்றும் 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க கொல்கத்தா அணி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
Also Read: இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு வந்த ஆப்பு! இலங்கை வென்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு!
மேலும் ரஸிலுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ஸ்ரேயாஸ், கொல்கத்தா அணியை விட்டு விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
ஒருவேளை கொல்கத்தா அணியிலிருந்து ஸ்ரேயாஸ் விலகினால் அவரை பெருந்தொகை கொடுத்து எடுக்க ஆர்சிபி,பஞ்சாப் அணிகள் ஆர்வத்துடன் உள்ளன.
தற்போது ஆர்சிபி அணியிலும் பஞ்சாப் அணியிலும் கேப்டன் இல்லை என்ற நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வந்தால் அவருக்கு கேப்டன் பதவியுடன் 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஏலத்தில் எடுக்க இரண்டு அணிகளும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.