நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி... மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!
இன்றைய தங்கம் விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது.
இந்நிலையில், 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 15) ஒரு சவரன் ரூ.54,280-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,785-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 99.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,500-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை நேற்று (ஜூலை 15) ஒரு கிராம் ரூ.99.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,700-க்கும் விற்பனையானது.