சிராஜை கட்டி அணைத்த டிராவிஸ்... முடிவுக்கு வந்த சண்டை... நடந்தது என்ன?
முகமது சிராஜ் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தி கொண்டனர்.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஹமது சிராஜுக்கும் ஏற்பட்ட மோதல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முகமது சிராஜ் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தி கொண்டனர்.
140 ரன்கள் விளாசிய வீரரை அவுட் ஆக்கி விட்டு சிராஜ் கத்துவது சரி இல்லை என்று பலரும் கூறியிருந்தனர். இந்த நிலையில் சிராஜிடம் தான் இங்கு நன்றாக பந்து வீசினீர்கள் என்று தான் கூறினேன். ஆனால் நான் சொன்னதை அவர் தவறாக புரிந்து கொண்டு என்னை திட்டி விட்டதாக டிராவிஸ் ஹெட் கூறினார்.
இதற்கு பதில் சொன்ன சிராஜ், டிராவிஸ் ஹெட், பொய் சொல்கிறார். அவர் என்னை தவறாக பேசினார். அதனால்தான் நான் அவரை கோபமாக திட்டி வழியனுப்பி வைத்தேன் என்று சிராஜ் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி கொண்டனர்.
அப்போது டிராவிஸ் ஹெட்டும் சிராஜும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அனைத்து கொண்டு பிரச்சனையை முடித்தனர். இதனை தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள டிராவிஸ் ஹெட், எங்களுக்குள் இருந்த பிரச்சனையை நாங்கள் முடித்துக் கொண்டோம். ஒருவருக்கு ஒருவர் நாங்கள் புரிந்து கொள்ளாமல் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டு விட்டோம்.
நாங்கள் இந்த பிரச்சனையிலிருந்து நகர்ந்து செல்கின்றோம். எங்களை பொறுத்தவரை எங்களுக்கு இது சிறந்த வாரமாக அமைந்தது. இந்தப் பிரச்சினைகளை கொண்டு வந்து அதனை யாரும் கெடுக்க வேண்டாம். நான் பழகுவதற்கு இனிமையானவன் சிராஜும் அப்படித்தான் என்று நான் நினைக்கின்றேன். எனவே நாங்கள் இருவரும் இதை கடந்து சென்று விட்டோம் என்று கூறி டிராவிஸ் ஹெட்டின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் எப்போதுமே சிறப்பாக விளையாடி தனி ஆளாக போட்டியை மாற்றி வருகிறார். டெஸ்ட் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை என தொடர்ந்து தற்போது அடிலெய்ட் டெஸ்டிலும் டிராவிஸ் ஹெட்டுக்கு தனியாளாக நின்று இந்தியாவை தோற்கடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.