டி20 உலகக்கோப்பையில் முதல்முறையாக உகாண்டா.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று ட்விஸ்ட்!
யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக உகாண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக உகாண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு சவாலாக விளங்கிய ஜிம்பாப்வே, இந்த தகுதி சுற்றில் உகாண்டா உள்ளிட்ட பிற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வி அடைந்து வாய்ப்பை இழந்தது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஏழு ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஆப்பிரிக்க பிராந்திய டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடர் நடைபெற்றது.
அதில் உகாண்டா அணி தான் ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று அந்த தொடரின் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று டி20 உலகக்கோப்பைக்கு 20வது அணியாக தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு அணியாக நமிபியா தகுதி பெற்றுள்ளது. நமிபியா அணி ஏற்கனவே ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை போன்றவற்றில் பங்கேற்று இருக்கிறது.
ஆனால், உகாண்டா முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதுடன், அந்த அணியில் ரோனக் பட்டேல், அல்பேஷ் ரம்ஜானி, தினேஷ் நக்ரானி போன்ற சில இந்திய வம்சாவளி வீரர்களும் உள்ளனர்.
2024 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பையில் பங்கேற்க 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.