டி20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்வது உறுதி... கேப்டன் யார் தெரியுமா? சத்திய செய்யும் ஜெய்ஷா!
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
ஐசிசி உலக கோப்பையை இந்தியா கடைசியாக 2013 ஆம் ஆண்டு தான் வென்றது. அதாவது சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு ஐசிசி உலக கோப்பைக்கான தொடர்களில் இந்திய அணி தொடர்ந்தும் தோல்வியை தழுவி வருகிறது.
இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக உள்ள நிலையில், குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரசிகர்களுக்கு ஒரு சத்தியத்தை செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
”2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியை நான் நேரில் கண்டேன். நம்மால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை. நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை நாம் வெல்வோம்.” என்று கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பையில் யார் கேப்டனாக இருக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி இருக்கும் நிலையில், “ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம்” என்று ஜெயிஷா கூறியுள்ளார்.
இதன் ஊடாக ரோகித் சர்மா தான் டி20 அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதையும் தனது பேச்சின் மூலம் ஜெய்ஷா தெளிவுபடுத்திவிட்டார்.