யூனியன் அஷ்யூரன்ஸ் புரட்சிகரமான e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை அறிமுகம் செய்துள்ளது
யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி வழங்கல்களை சுயமாக முன்னெடுக்க உதவும் வகையில் புரட்சிகரமான e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை துறையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது
யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி வழங்கல்களை சுயமாக முன்னெடுக்க உதவும் வகையில் புரட்சிகரமான e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகளை துறையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது
ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான, யூனியன் அஷ்யூரன்ஸ், e-MER (Electronic Medical Examination Report) மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகளை அறிமுகம் செய்துள்ளது. காப்புறுதி பத்திரம் வழங்கும் செயன்முறையை துரிதப்படுத்தும் வகையில் இந்த புதிய சேவை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னணி சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்குநரான டேர்டன்ஸ் வைத்தியசாலையுடன் 2023 ஏப்ரல் 10ஆம் திகதி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆயுள் காப்புறுதித் துறையில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகளினூடாக, காப்புறுதிப் பத்திர வழங்கல் செயன்முறையை 15 நிமிடங்களினுள் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் துரிதப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக, இந்தச் செயன்முறைக்கு ஒன்றறை நாட்கள் வரையான காலம் தேவைப்படும்.
தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் தீர்வுகளின் ஒன்றிணைப்பினூடாக இந்தச் செயன்முறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களுடனான ஒப்பற்ற தொடர்பாடல்களை பெருமளவு சௌகரியமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக சில அனுகூலங்கள் ஏற்படுத்தப்படும். வாடிக்கையாளர் தரவுகளின் பிரத்தியேகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதுடன், பாதுகாப்பான மற்றும் அதிகளவு தங்கியிருக்கக்கூடிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் முழுமையான மற்றும் துல்லியமான ஆவணப்படுத்தலை ஊக்குவிப்பது போன்றவற்றை மேற்கொள்ள உதவும்.
மேலும், காப்புறுதிவழங்குநர்கள் மருத்துவ அறிக்கைகளை தம்வசம் வைத்திருக்கக்கூடியதாக இருக்கும். விண்ணப்பதாரியின் மருத்துவ வரலாறு தொடர்பான முழுமையான தோற்றப்பாட்டினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு பரிபூரண மற்றும் இடர் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடிவதுடன், மேம்படுத்தப்பட்ட இடர் வகைப்படுத்தலை வழங்கவும் உதவும்.
மேலும், நிறுவனத்தின் 'Go Green' திட்டத்துக்கமைய, இந்தச் செயன்முறை கடதாசிப் பாவனையற்றதாக அமைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காப்புறுதி வழங்குநர்களுக்கு பெருமளவு நேரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், இடர்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “காப்புறுதி மற்றும் மருத்துவ பிரிவுகளிடையே உறுதியான இணைப்புகள் காணப்படுகின்றன. டிஜிட்டல் உறுதித்தன்மை மற்றும் காப்புறுதி எளிமைப்படுத்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல்லை பூர்த்தி செய்வதாக இது அமைந்துள்ளது. சௌகரியம், இலகுத்தன்மை மற்றும் ஒப்பற்ற வினைத்திறன் போன்றவற்றில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு, புதிய தலைமுறை காப்புறுதி அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்துக்கமைவாகவும் இது அமைந்துள்ளது. என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம தொழில்நுட்ப அதிகாரியான ருமேஷ் மோதரகே கருத்துத் தெரிவிக்கையில், “e-MER மற்றும் டிஜிட்டல் மருத்துவப் பதிவுகள் தொழிற்துறையில் புதிய எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும். யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் இவ்வாறான டிஜிட்டல் புத்தாக்கங்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், சேவை நியமங்களை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்லவும் ஏதுவாக அமைந்திருக்கும்.
2024 ஆம் ஆண்டுக்கான நோக்கம், காப்புறுதி வழங்கலில் 90%ஆன பங்களிப்பை தன்னியக்கமயமாக்கலினூடாக மேற்கொள்வது எனது எதிர்பார்ப்பாகும். இந்த இலக்கை எய்துவதற்கான அடித்தளத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது.” என்றார். டேடர்ன்ஸ் வைத்தியசாலையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மருத்துவ பங்காளராக திகழ்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். மருத்துவம் மற்றும் காப்புறுதித் துறைகளிடையே ஒன்றிணைவுகளை டிஜிட்டல் மயமாக்கல் எவ்வாறு மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதை காண முடிகின்றது. உயர் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளின் வழங்குநர் எனும் வகையில், பெருமளவு சௌகரியத்தினூடாக சேவைத் தரத்தை மேம்படுத்தவும், நவீன வாழ்க்கைமுறைகளை மேம்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 19.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 57.7 பில்லியனையும், 2023 மார்ச் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்களுக்கு வழங்குகின்றது.
நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
படம் (இடமிருந்து) – மலிந்த டயஸ், செயற்திட்ட முகாமையாளர் – யூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் அப்ளிகேஷன்கள், அனுர ஹெட்டிகந்த, உதவி உப தலைவர் – யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி வழங்கல் பிரிவு, லச்சினி சித்திரசேன, சிரேஷ்ட முகாமையாளர் – யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் பிரிவு, ருமேஷ் மோதரகே, பிரதம தொழில்நுட்ப அதிகாரி - யூனியன் அஷ்யூரன்ஸ், மஹானில் பெரேரா, பிரதம செயற்பாட்டு அதிகாரி – டேடர்ன்ஸ் வைத்தியசாலை, ரிமாஸ் ரிஸ்வி, டேடர்ன்ஸ் வைத்தியசாலையின் வியாபார அபிவிருத்தி தலைமை அதிகாரி, ரஜீவ் பண்டாரநாயக்க, சிரேஷ்ட முகாமையாளர் – டேடர்ன்ஸ் வைத்தியசாலை, ஹஷான் லொகுகே, மென்பொருள் வடிவமைப்பு முகாமையாளர் – டேடர்ன்ஸ் வைத்தியசாலை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு.