ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. 

ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயற்பட்டு வரும் நிலையில், அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதால், அடுத்த பயிற்சியாளரை தெரிவு செய்ய பிசிசிஐ முனைப்பு காட்டி வருகின்றது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில், பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்வாரா அல்லது பதவி விலகுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் டிராவிட்,  வழக்கமாக நான் செய்து முடித்த பணியை ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் எதிர்காலம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். 

சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா? தோனியுடன் அவசர சந்திப்பு.. என்ன நடந்தது?

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று ராகுல் டிராவிட் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தலைமை பயிற்சியாளர் பதவியில் செயல்பட விவிஎஸ் லக்‌ஷ்மண் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது பிசிசிஐ தலைமை நிர்வாகிகளை சந்தித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ராகுல் டிராவிட்டின் இடத்தை அவரது நண்பரான விவிஎஸ் லக்‌ஷ்மணை கொண்டு நிரப்ப பிசிசிஐ விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இறுதி முடிவை ஜெய் ஷாவே எடுப்பார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp