ஐபிஎல் முடிந்த உடனே காதலியை கரம் பிடித்த தமிழக வீரர்.. மனைவி யார் தெரியுமா?
வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் போட்டியில் கேகேஆர் அணி 10 புள்ளி 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

2024 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வெங்கடேஷ் ஐயர், 14 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் எடுத்தார்.
வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் போட்டியில் கேகேஆர் அணி 10 புள்ளி 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர், தன்னுடைய நீண்ட கால காதலியான சுருதி ரகுநாதனை திருமணம் செய்து கொண்டார்.
வெங்கடேஷ் ஐயர், கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகியது.
இந்த நிலையில் அது எல்லாம் வெறும் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய காதலியை அவர் கரம் பிடித்துக் கொண்டார்.
வெங்கடேஷ் ஐயருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வந்துள்ளனர்.