ரோஹித் எடுத்த முடிவு.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. மனம் திறந்த பயிற்சியாளர்!

டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு  30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 

ரோஹித் எடுத்த முடிவு.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. மனம் திறந்த பயிற்சியாளர்!

டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு  30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 

அப்போது பும்ராவுக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், கடைசி ஓவரில் தான் கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை பும்ராவுக்கு அளித்து அவரது ஓவர்களை முடித்தார் ரோஹித் சர்மா.

அந்த இரண்டு ஓவர்களில் மொத்தம் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. அதனால், தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

அத்துடன், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றதுடன், ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இது குறித்து பேசிய முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ரோஹித் சர்மாவின் திட்டங்களை பாராட்டி உள்ளார்.

ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன். 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பும்ராவின் ஓவர்களை முன்பே அவர் முடித்தார். அந்த முடிவால் தான் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

கோடிகளில் இழந்த தோனி... சிஎஸ்கே அணிக்காக செய்த தியாகம்... நடந்தது என்ன?

அவரது திட்டம் களத்தில் துல்லியமாக வேலை செய்தது. அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என நமக்கு தோன்றும். ஆனால், சில நிமிடங்களுக்கு பின்பு நமக்கு அது புரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரோஹித் சர்மா வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார் என்றும், அவர் திட்டமிடுதலுக்காக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார் என்றும் விக்ரம் ரத்தோர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp