கோலி, ரோஹித் ஓய்வு.. இந்திய அணியில் இடம்பெறவுள்ள மாற்றம்!
நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர்கள் கடைசியாக ஆடும் டி20 தொடராக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்க வெளியாகி இருக்கின்றது.
அத்துடன், நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர்கள் கடைசியாக ஆடும் டி20 தொடராக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டதுடன், விராட் கோலி உள்ளிட்ட 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இதுவரை டி20 உலகக்கோப்பையை வெற்றிக்கொள்ளவில்லை.
2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இருந்தாலும் இறுதிப் போட்டியில் அவர் இடம்பெறவில்லை.
மும்பை அணி வீரர்கள் எல்லை மீறல்... பிசிசிஐ கொடுத்த தண்டனை... காரணம் ஹர்திக்?
இந்த நிலையில், கடைசி முயற்சியாக டி20 உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் முடிவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கக் கூடும் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 109 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 37 அரைசதங்களுடன் 4,037 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா 143 இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்களும், 29 அரைசதங்களும் விளாசி 3,974 ரன்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.