குடும்பத்தோடு இந்தியாவை விட்டு வெளியேறுகிறாரா விராட் கோலி? என்ன நடந்தது?

டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்ததுடன், 2017 இல் இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தோடு இந்தியாவை விட்டு வெளியேறுகிறாரா விராட் கோலி? என்ன நடந்தது?

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்ததுடன், 2017 இல் இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு விராட் கோலிக்கு முதல் குழந்தையும், 2024 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில், விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விராட், தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விராட் இன்னும் மிகவும் உடற்தகுதியுடன் உள்ளதாகவும், அவர் ஓய்வு பெறும் வயதை அடையவில்லை என்பதால், இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக நிச்சயம் விளையாடுவார் என்றும், கடந்த 26 ஆண்டுகளாக அவரை பற்றி தெரியும் என்பதால், அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது என்று சர்மா மேலும் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp