குடும்பத்துடன் சாமியாரை பார்க்க சென்ற விராட் கோலி... என்ன காரணம் தெரியுமா?

பிரமானந்த் என்ற  சாமியாரை சந்தித்த விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மண்டியிட்டு அவரை வணங்கியுள்ளனர்.

குடும்பத்துடன் சாமியாரை பார்க்க சென்ற விராட் கோலி... என்ன காரணம் தெரியுமா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சாமியாரை சந்திக்க சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தில் காணப்படும் விருந்தாவன் தாம் என்ற பகுதியில் உள்ள பிரமானந்த் என்ற  சாமியாரை சந்தித்த விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மண்டியிட்டு அவரை வணங்கியுள்ளனர்.

சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ள நிலையில், சாமியாரை சந்தித்து இருக்கிறார். 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதே பிரேமானந்த் சாமியாரை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சந்தித்து இருந்தனர்.

விராட் கோலியை இந்த முறை சந்தித்த பிரேமானந்த், எவ்வளவு பயிற்சி செய்தாலும் சில சமயம் நாம் தோல்வி அடைவோம். அது கடினமாக இருந்தாலும், நாம் புன்னகையுடனும், தோல்வியின் போது அமைதியாகவும் இருக்க வேண்டும் என கோலிக்கு அறிவுரை கூறி உள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளதுடன், 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இந்த இரண்டு தொடர்களிலும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடலாம் என்று கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp