எந்த வீரரும் செய்யாத இமாலய சாதனை... விராட் கோலி படைத்த சரித்திரம்!
விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி உள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மோதின.
இந்தப் போட்டியானது சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி ஆடும் நூறாவது டி20 போட்டி ஆகும்.
இந்த நிலையில், ஒரே மைதானத்தில் நூறு டி20 போட்டியில் ஆடிய ஒரே வீரர் விராட் கோலி தான் என கூறப்படுகிறது.
2008 முதல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று உள்ளதுடன், அப்போது முதல் சின்னசாமி மைதானமே அந்த அணியின் சொந்த மைதானமாக உள்ளது.
அதன் காரணமாக, விராட் கோலி அந்த மைதானத்தில் நூறு போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி உள்ளார்.
அத்துடன், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ரோஹித் சர்மா, மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 80 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
சின்னசாமி மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி 3298 ரன்கள் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.