58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

அதாவது, விராட் கோலி இன்னும் 58 ரன்கள் அடித்தால் இந்த சாதனையை படைப்பார் என்ற நிலையில், முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால், விராட் கோலி அந்த சாதனையை சென்னையில் படைக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

 26,942 ரன்கள் சேர்த்துள்ள விராட் கோலி, இன்னும் 58 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். 

இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே அந்த மைல் கல்லை எட்டி உள்ள நிலையில், நான்காவது வீரர் என்ற சரித்திரத்தை விராட் கோலி படைக்க உள்ளார்.

533 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி  591 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 26,942 ரன்கள் சேர்த்துள்ளார். 

80 சதம் மற்றும் 140 அரை சதங்களை அடித்துள்ள விராட் கோலி , அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்துள்ளதுடன், விராட் கோலி 80 சதங்கள் அடித்துள்ளார். அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில்  34,357 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். 

28,016 ரன்களுடன் குமார் சங்ககாரா இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், 27,483 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 26,942 ரன்களுடன் விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார். 

தற்போது இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்து இருக்கும் வீரர் ரோஹித் சர்மா மட்டுமே என்பதுடன், அவர் 19,234 ரன்கள் சேர்த்துள்ளதுடன், பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...