டி20 போட்டியில் விளையாட கோலிக்கு இப்போது என்ன அவசியம்?...  ரெய்னா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடக்க உள்ளது.

டி20 போட்டியில் விளையாட கோலிக்கு இப்போது என்ன அவசியம்?...  ரெய்னா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடக்க உள்ளது.

சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடப் போகிறார். 

இந்த நிலையில், டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

எப்போதுமே அதிரடியாக ஆட கூடிய விராட் கோலி, களத்தில் நின்றால் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். 20 ஓவர் என்பது கொஞ்சம் பெரிய போட்டி தான். ஏனென்றால் 20 ஓவர் நின்று விளையாட வேண்டும்.

நாம் இன்னும் மூன்று நான்கு மாதத்தில் டி20 உலக கோப்பையில் விளையாடப் போகிறோம். ஆடுகளங்கள் வீரர்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும் வகையில் இருக்கும். 

இந்தியா 19 போட்டிகளில் 17 போட்டிகளில் சேசிங்கில் விராட் கோலியின் தயவால் வெற்றி பெற்றிருக்கிறது. சேசிங் செய்யும் போது மனதில் எப்படி விளையாட வேண்டும் என்று கணக்கு போட்டு விராட் கோலி விளையாடுவார். 

விராட் கோலி அதிரடியையும் காட்டுவார் இதனால் இந்தியா நிச்சயம் 225 ரன்கள் அடிக்கும் என்று ரெய்னா கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp