ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு... ஆட்டத்தை கலைத்த ரோகித் சர்மா!

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் மீண்டும் ரோகித் சர்மா இணைந்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு... ஆட்டத்தை கலைத்த ரோகித் சர்மா!

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் மீண்டும் ரோகித் சர்மா இணைந்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. 

அதேபோல் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்களுக்கு பின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர். 

அண்மையில், மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். அப்போது ரோகித் சர்மா தரப்பில் ஒரு வாழ்த்து கூட ஹர்திக் பாண்டியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. 

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 அணியில் இணையவில்லை. 

இப்போது, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே டி20 உலகக்கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளனர். அத்துடன், டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் நடக்கவுள்ளதால், நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐக்கு விருப்பம் இருக்கவில்லை.

இதனால் ஹர்திக் பாண்டியாவை ஓரங்கட்டிவிட்டு மீண்டும் ரோகித் சர்மாவையே பிசிசிஐ கேப்டனாக நியமனம் செய்துள்ளதால், ஹர்திக் பாண்டியாவின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp