இன்னும் 96 ரன்கள் போதும்.. உலக சாதனை படைக்கப் போகும் கோலி.. சச்சினின் சாதனை தகர்ப்பு?

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 13,906 ரன்களை அடித்து உள்ள விராட் கோலி, 283 இன்னிங்ஸ்களில் 136 ரன்களை 58.18 என்ற பேட்டிங் சராசரியுடன் எடுத்து இருக்கிறார்.

இன்னும் 96 ரன்கள் போதும்.. உலக சாதனை படைக்கப் போகும் கோலி.. சச்சினின் சாதனை தகர்ப்பு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். கோலி 96 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்த சாதனையை செய்ய வாய்ப்பு உள்ளது.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 13,906 ரன்களை அடித்து உள்ள விராட் கோலி, 283 இன்னிங்ஸ்களில் 136 ரன்களை 58.18 என்ற பேட்டிங் சராசரியுடன் எடுத்து இருக்கிறார்.

இதில், 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களை அடித்து உள்ளதுடன், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை விராட் கோலி வசமே இப்போதும் உள்ளது. 

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்த 2018 ஆம் ஆண்டு எட்டியதுடன், அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் தனதாக்கி இருந்தார்.

இதயும் படிங்க: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி... ஏற்பட்டுள்ள குழப்பம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு?

இந்த நிலையில், அவர் 96 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 14,000 ஒரு நாள் ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைப்பதுடன், இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாரா ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 14,000  ரன்களை அடித்து உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களிலும், சங்ககாரா 378 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல் சாதனையை எட்டியதுடன், விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் விளையாடி 96 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 286 இன்னிங்ஸ்களிலேயே இந்த இலக்கை எட்டுவதுடன், சச்சின் சாதனையை தகர்த்து விடுவார்.

எனினும், சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக உள்ளதுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மோசமாக ஆட்டம் இழந்து வந்தார்.

அதன்பின்னர், ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி அதிலும் அவர் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அரை சதம் அல்லது சதம் அடிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp