சச்சின் கூட படைக்காத சாதனை.. புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் கூட படைக்காத சாதனை.. புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஐசிசி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 3 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் 8 சுற்றியில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 

நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்கத்திலேயே அபார சிக்சரை விளாசி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். ஸ்பின்னர்களை வைத்து விராட் கோலி வீழ்த்தலாம் என்று வங்கதேசம் அணி திட்டமிட்டது.

ஆனால் ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், ரியாத் ஹொசைன் என்று எந்த ஸ்பின்னர் பவுலிங் செய்தாலும் விராட் கோலி பொளந்து கட்டினார். அதிலும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் விராட் கோலி பந்தை மட்டும் பார்த்து அடித்த சிக்சர் மிரட்டலாக அமைந்தது. 

இதனால் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தான்சிம் பந்தில் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தான்சிமை முதல் பந்திலேயே அட்டாக் செய்ய நினைத்து இறங்கி வந்த விராட் கோலி, போல்டாகி வெளியேறினார். இருந்தாலும் 37 ரன்கள் விளாசியதன் மூலமாக விராட் கோலி புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளார். 

அதாவது ஐசிசி தொடர்களில் டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் மொத்தமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 1,795 ரன்களையும், டி20 உலகக்கோப்பை தொடரில் 1,207 ரன்களையும் விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மா, டேவிட் வார்னர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சங்கக்காரா ஆகியோர் உள்ளனர். 

சச்சின் கூட படைக்காத சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி முதல் 3 போட்டிகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், கடந்த 2 போட்டிகளில் விராட் கோலி நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். 

இன்னும் முழுமையான ஃபார்முக்கு வரவில்லை என்றாலும், தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடும் இன்டென்டை காட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp