ராசியே இல்லை... விராட் கோலி செய்த மோசமான சாதனை... 38வது முறையாக டக் அவுட்!
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
![ராசியே இல்லை... விராட் கோலி செய்த மோசமான சாதனை... 38வது முறையாக டக் அவுட்!](https://www.colombotamil.lk/uploads/images/202410/image_870x_6710c1a3aaee7.jpg)
நியூசிலாந்து மற்றம் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
ஏற்கெனவே முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2ஆவது நாளில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் டக் அவுட்டாகியும் வெளியேறியதுடன், சின்னச்சாமி மைதானத்தில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கியதுடன், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நம்பர் 3ல் 6 முறை ஆடியுள்ள விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. இந்த நிலையில் இன்றும் விராட் கோலி டக் அவுட்டாகி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் டக் அவுட்டானதன் மூலமாக விராட் கோலி, சின்னச்சாமி மைதானத்தில் 4வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறியுள்ளதுடன், சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத் ஆகிய மைதானங்களில் தலா 3 முறை விராட் கோலி டக் அவுட்டாகி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
ஜாகீர் கான் 43 முறை டக் அவுட்டாகி முதல் இடத்திலும், இஷாந்த் சர்மா 40 முறை டக் அவுட்டாகி 2வது இடத்திலும் இந்தப் பட்டியலில் உள்ளதுடன், இந்த வருடத்தில் தொடர்ந்து 7ஆவது முறையாக அரைசதம் அடிக்காமல் விராட் கோலி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.