8 ஆண்டுகளாக பந்து வீசாத விராட் கோலி... ஐசிசி தரவரிசையில் ஜடேஜாவை முந்தியது எப்படி?

49 புள்ளிகள் உடன் விராட் கோலி தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் உள்ளதுடன், ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார். 

8 ஆண்டுகளாக பந்து வீசாத விராட் கோலி... ஐசிசி தரவரிசையில் ஜடேஜாவை முந்தியது எப்படி?

டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் டி20 போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி பந்துவீசி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் ஆல்ரவுண்டரான ஜடேஜாவை விட தரவரிசை பட்டியலில் முன்னிலையில் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

49 புள்ளிகள் உடன் விராட் கோலி தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் உள்ளதுடன், ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார். 

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, ஆல் ரவுண்டர் என்ற அடிப்படையில் தரவரிசையை கணக்கிடும் போது பேட்டிங் மற்றும் பௌலிங் புள்ளிகளை பெருக்கி அதனை ஆயிரத்தால் வகுத்தால் என்ன புள்ளிகள் வருகிறதோ அதை வைத்து தான் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜடேஜாவின் பேட்டிங் விட விராட் கோலியின் பேட்டிங் புள்ளிகள் சிறந்த முறையில் உள்ளதால், அதனை வைத்து கணக்கிடும் போது ஜடேஜாவை விட விராட் கோலி முன்னிலையில் உள்ளார்.

இதுவரை 125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4118 ரன்கள் குவித்துள்ள விராட் கோலியின் பேட்டிங் சராசரி 48 ஆகும், ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும்.

பந்துவீச்சில் இதுவரை சர்வதேச போட்டிகளில் விராட் கோலி நான்கு விக்கெட் எடுத்திருக்கிறார்.  ஜடேஜா 74 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி வெறும் 515 ரன்கள் தான் எடுத்துள்ளதுடன், அவர் சாய்த்த விக்கெட்டுகள் 74 ஆகும். 

எனினும் 8 ஆண்டுகளாக பந்து வீசாத விராட் கோலி ஜடேஜாவை ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முந்தி இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp