டி20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி... 100 அரைசதங்கள் அடித்து முதலிடம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது நூறாவது டி20 கிரிக்கெட் அரைசதத்தை நிறைவு செய்து  மாபெரும் மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

டி20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி... 100 அரைசதங்கள் அடித்து முதலிடம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது நூறாவது டி20 கிரிக்கெட் அரைசதத்தை நிறைவு செய்து  மாபெரும் மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சேஸிங்கில் அற்புதமாக விளையாடி 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 100 அரை சதங்களை அடித்து உள்ளார்.

அத்துடன், ஐபிஎல் தொடரில் அதிக ஐம்பது ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்து உள்ளதுடன், ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது சாதனைகளை முந்தி முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

இதுவரை 404 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி அதில் 13072 ரன்களை அடித்து உள்ளதுடன், மொத்தம் 100 அரை சதங்களும், 9 சதங்களும் அடித்து இருக்கிறார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 38 அரை சதங்களும், ஒரு சதமும் அடித்து உள்ளதுடன், இதுவரை டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் முதல் இடத்தில் இருக்கிறார். 

அவர் மொத்தம் 108 அரை சதங்களை அடித்து உள்ளதுடன், இரண்டாவது இடத்தில் விராட் கோலி 100 அரைசதங்களுடன் இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 90 அரை சதங்களை அடித்து இருக்கிறார். அவர் 11 சதங்களையும் அடித்து இருக்கிறார்.