அரைசதம் விளாசி... கிறிஸ் கெய்லை முந்திய கோலி.. மாபெரும் சாதனை!

உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்துள்ளதுடன், டி20 கிரிக்கெட்டில் 50துக்கும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Apr 25, 2025 - 08:28
அரைசதம் விளாசி... கிறிஸ் கெய்லை முந்திய கோலி.. மாபெரும் சாதனை!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 42வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பெங்களூருவுக்கு எதிராக முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் பில் சால்ட் 26 (23) ரன்னில் ஹஸரங்கா சுழலில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அதிரடியை வெளிப்படுத்தினார். 

அவருடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். விராட் கோலி 70 (42) ரன்கள் எடுத்த போது ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

படிக்கல் 50 ரன்னில் சந்திப் சர்மாவிடம் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 23 (15) ரன்களை விளாசினார்.

மேலும் படிங்க | சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா?  எந்த அணி வென்றால் நல்லது?

ஜித்தேஷ் சர்மா 20* (10) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில், 20 ஓவரில் பெங்களூரு அணி 205-5 ரன்கள் அடித்து அசத்தியது. ராஜஸ்தான் அணியின் சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்தப் போட்டியில் அடித்த அரை சதத்தையும் சேர்த்து விராட் கோலி தம்முடைய டி20 போட்டிகளில் 111 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 

உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்துள்ளதுடன், டி20 கிரிக்கெட்டில் 50துக்கும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 110 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்து விராட் கோலிக்கு முன்பாக இருந்தார். அதன்படி, இந்தப் பட்டியலில், டேவிட் வார்னர்: 117, விராட் கோலி: 111,  கிறிஸ் கெய்ல்: 110, பாபர் அசாம்: 101, ஜோஸ் பட்லர்: 95 ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!