வெறும் 35 ரன் போதும்.. இமாலய சாதனை படைக்கப் போகும் விராட் கோலி!
இதன் மூலம் இந்திய அளவில் முதல் ஆளாக அந்த மைல்கல் சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளதுடன், உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார். தற்போது, மற்றுமொரு மைல்கல்லாக விராட் கோலி 12,000 டி20 ரன்களை குவிக்க இருக்கிறார் .
தற்போது 374 டி20 போட்டிகளில் ஆடி 357 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 11965 ரன்கள் குவித்துள்ள கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் 35 ரன்கள் சேர்த்தால் அவர் 12000 ரன்களை எட்டி விடுவார்.
இதன் மூலம் இந்திய அளவில் முதல் ஆளாக அந்த மைல்கல் சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), கீரான் பொல்லார்ட் (12390 ரன்கள்) உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கும் வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. டி20 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 41 ஆகும்.
விராட் கோலி நீண்ட இடைவெளிக்கு பின் அவர் சர்வதேச டி20 போட்டியில் ஆட உள்ளார். அதற்கு பயிற்சி எடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறார்.