5 ஆண்டுகளாக அணியில் சேர்க்கப்படாத வீரர்... கோலியை விட சிறந்தவர்... பாகிஸ்தான் வீரரின் பேச்சால் சர்ச்சை
டி20 உலக கோப்பையில் விராட் கோலியுடைய ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் உள்ளதுடன், உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது.
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துள்ளது.
தன்னுடைய சகோதரர் உமர் அக்மல்,சிறப்பாக விளையாடி வந்த நிலையிலும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள பிளவு? பாபர் அசாம் மீது புகார்.. களமிறங்கிய மாமனார்..
தமது சகோதரர் விராட் கோலி விட சிறந்த புள்ளிகளை டி20 உலக கோப்பையில் வைத்திருப்பதாகவும் கோலியை விட உமர் அக்மல் தான் சிறந்து விளங்குகிறார் என்றும் ஆனால், வாய்ப்பு இல்லாததால் விராட் கோலி அருகே கூட உமர் அக்மலால் வர முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விராட் கோலி விட அதிக ஸ்ட்ரைக் ரேட், அதிக ரன்கள் ஆகியவற்றை உமர் அக்மல் டி20 உலக கோப்பையில் வைத்திருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், உமர் அக்மல் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை போய் கோலியுடன் தொடர்பு படுத்தலாமா என்று ரசிகர்கள் கூறி உள்ளனர்.
இருந்தாலும், டி20 உலக கோப்பையில் விராட் கோலியுடைய ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் உள்ளதுடன், உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது.
அத்துடன், விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் டி20 உலக கோப்பையில் 83 ரன்கள் ஆகும் என்று நிலையில், உமர் அக்மாரின் அதிகபட்ச ஸ்கோர் 94 ரன்கள் ஆகும்.
இப்படி உமர் அக்மல் அண்மை காலமாக நன்றாக விளையாடி இருந்தாலும், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்க்கவில்லை.