இந்திய அணியின் தோல்வியால் இலங்கை அணிக்கு அதிஷ்டம்... டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் திடீர் திருப்பம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்திய அணியின் தோல்வியால் இலங்கை அணிக்கு அதிஷ்டம்... டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் திடீர் திருப்பம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.

அத்துடன், மீதமுள்ள ஒரு இடத்தை பிடிப்பதற்கு இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளதுடன், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி மட்டுமே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தால் அதன் மூலம் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் அதன் மூலம் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 53.51 என்பதாக சரியும். 

அதன் மூலம் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை  வீழ்த்துவது என்பது கடினம் என்றாலும் இலங்கை அணிக்கு அந்த வாய்ப்பு உள்ளது. மறுபுறம், மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், சிட்னி போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்துவிடும்.

இந்திய அணி மெல்போர்ன் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், சிட்னி போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்து இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 1 - 0 என வெல்ல வேண்டும். 

அப்போது மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணி தான் இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அந்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றால் போதும் என்ற நிலை காணப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp