இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்த இலங்கை.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு!

இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு ஆப்பு வைத்த இலங்கை.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வாய்ப்பு!

இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் இந்த தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர்களின் தகுதிகாண் வாய்ப்பு முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது புள்ளி பட்டியலில், இந்தியா 68.52% வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியா 62.50% வெற்றி சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 50% வெற்றி சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 45.83% வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை அணி தற்போது 42.8% வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில், இறுதிப் போட்டிக்கு எந்த அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான கணிப்புகளை பார்க்கலாம்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. இனி அவர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் முழுமையாக வென்றாலும் கூட இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாது.

அதிரடி காட்டிய இலங்கை அணி... வேற லெவல் சாதனை... 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!

ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, அவர்கள் எஞ்சியுள்ள ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளை வெற்றிகொள்ள வேண்டும். இதில், இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்திய அணிக்கு வரும் 10 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றால் பைனல் செல்லும் வாய்ப்பை பெறலாம். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால், பைனல் தகுதிக்கு பாதிப்பு ஏற்படாது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் தேவைப்படுகிறது. நியூசிலாந்து அணியால் எஞ்சியுள்ள எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் அவசியம். இலங்கை அணி, 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றால், இறுதிப் போட்டிக்கு தகுதிகாண வாய்ப்பை பெறலாம்.

எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் இந்த அணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படும் என்பதை தீர்மானிக்கும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp