பவுண்டரியை தடுத்த அம்பயர்.. கோபத்தின் உச்சிக்கே சென்ற கேப்டன்.. நடந்தது என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகின்றது.

பவுண்டரியை தடுத்த அம்பயர்.. கோபத்தின் உச்சிக்கே சென்ற கேப்டன்.. நடந்தது என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகின்றது.

வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் நேராக பந்தை அடித்ததுடன், பந்து பவுண்டரி செல்லும் அல்லது 2 ரன்களாவது எடுக்கலாம் என அவர் நினைத்த நிலையில், அம்பயர் மீது பந்து அடித்து அந்த வாய்ப்பு பறிபோனது.

அதேநேரத், கடைசி ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸாக மேத்யூ வேட் தலைக்கு வந்தபோதும், வைடு தர அம்பயர் மறுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் கோபமடைந்தார்.

இது குறித்து மேத்யூ வேட், அம்பயரிடம் சென்று வைடு தருமாறு முறையிட்டார். ஆனால் அம்பயர் கண்டுகொள்ளவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்த வேட் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அவர் சென்ற பின் நாதன் எல்லிஸ் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில் அவர் அடித்த பந்து அம்பயர் மீது பட்டு கீழே விழுந்தது. அது பவுண்டரி சென்று இருக்கும் என உறுதியாக கூற முடியாது என்றாலும் 2 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தது.

இப்படி ஒரே ஓவரில் இரண்டு வாய்ப்புகள் அம்பயரால் பறிபோனதை எண்ணி வெளியே இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் கோபத்தில் காணப்பட்டார். 

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 160 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் இழந்த நிலையில் வெற்றிப்பெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp