டி20 கிரிக்கெட்டில் வனிந்து ஹசரங்க செய்த சாதனை... என்ன தெரியுமா?
இதில் முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தனர்.
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தனர்.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வனிந்து ஹசரங்க சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் இலங்கை அணி தரப்பில் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கவிற்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்த இலங்கை வீரர் எனும் சாதனையை ஹசரங்க படைத்துள்ளார்.
அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.