ஆட்டத்தையே மாற்றிய வீரர்கள்.. இந்திய அணி வரலாற்று சாதனை... தரமான சம்பவம்!

12 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இருந்து இந்தியா தடுமாறிய நிலையில், அபாரமாக விளையாடிய ரிங்கு சிங்  26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து அணியை மீட்டார். 

ஆட்டத்தையே மாற்றிய வீரர்கள்.. இந்திய அணி வரலாற்று சாதனை... தரமான சம்பவம்!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

புனேவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி  டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுடன், களம் இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

12 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இருந்து இந்தியா தடுமாறிய நிலையில், அபாரமாக விளையாடிய ரிங்கு சிங்  26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து அணியை மீட்டார். 

அதன் பிறகு சிவம் துபே,ஹர்திக் பாண்டியா ஜோடி அபாரமாக விளையாடியதுடன், ஹர்திக் பாண்டியா நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கலாக 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். 

சிவம் துபே 7 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 

இதை அடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்ததுடன், அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால் சரிவை கண்டது. 

எனினும் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புக் 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி வெற்றி நோக்கி சென்ற நிலையில், வருண் சக்கரவர்த்தி தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் ஒரே ஓவரில் ஹாரி புருக் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதனையடுத்து, ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை ரவி பிஸ்னாய் வீழ்த்த இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. 

எனினும் ஹர்ஷித் ராணா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் தங்களது இறுதி ஓவர்களில் இங்கிலாந்து அணியை 166 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியாவில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

ரவி பிஷ்னாய் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டையும் வீழ்த்திய நிலையில், இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது டி20 தொடரை வென்று சாதனை படைத்து உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp