ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட 4 வீராங்கனைகள்... நடந்தது என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில், நால்வரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பை கூட்டாக வெளியிட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட 4 வீராங்கனைகள்... நடந்தது என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை சேர்ந்த நான்கு வீராங்கனைகள் ஒரே நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியில் 20 வருடங்கள் விளையாடியுள்ள அனிசா முகமது, 15 வருடங்கள் விளையாடியுள்ள ஷகீரா செல்மான், மற்றும் இரட்டை சகோதரிகளான கைசியா நைட், கைஷோனா நைட் ஆகிய நால்வரும் இந்த அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

நால்வரும் ஒன்றாக ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறி உள்ளது.

அனிசா முகமது 2003ஆம் ஆண்டு, தனது 15 வயதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் அறிமுகம் ஆனதுடன், 141 ஒருநாள் போட்டிகளில் 180 விக்கெட்களும், 117 டி20 போட்டிகளில் 125 விக்கெட்களும் எடுத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனையை செய்துள்ளதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவர் மகளிர் அணிகளை சேர்த்து முதன் முதலில் 100 விக்கெட்கள் வீழ்த்தியவர் இவர்தான்.  கடைசியாக 2022 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் பங்கேற்றார்.

ஷகீரா செல்மான் 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 100 ஒருநாள் போட்டிகளில் 82 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 96 டி20 போட்டிகளில் 51 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். 2023ஆம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றார்.

இரட்டை சகோதரிகளான கைசியா நைட் மற்றும் கைஷோனா நைட் 2011 மற்றும் 2013இல் அறிமுகம் ஆகி இருந்தனர்.  இவர்களில் கைசியா 87 ஒருநாள் போட்டிகளில் 1327 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 801 ரன்களும் எடுத்துள்ளார். 

கைஷோனா 51 ஒருநாள் போட்டிகளில் 851 ரன்களும், 55 டி20 போட்டிகளில் 546 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், நால்வரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பை கூட்டாக வெளியிட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நால்வருக்கும் கடந்த சில மாதங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்காதமை காரணமாக அவர்கள் ஓய்வை அறிவித்து இருக்கலாம் என கூறப்படுகிறது

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp