அரை இறுதிக்கு போகும் அந்த 4 அணிகள் எது தெரியுமா? வெளியான தகவல்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. 

அரை இறுதிக்கு போகும் அந்த 4 அணிகள் எது தெரியுமா? வெளியான தகவல்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன. 

சூப்பர் 8 சுற்றில்  இரண்டாவது பிரிவில் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா அணி ஆறு புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. 

முதல் பிரிவில் இன்னும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி மாத்திரமே எஞ்சி உள்ளது.

சிறிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம்  இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அரை இறுதிக்கு முன்னேறிவிடும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேற 96.6 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதுடன், ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி நான்கு புள்ளிகளை பெறுவதுடன், ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக நெட் ரன் ரேட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

அந்த வகையில் அரை இறுதிக்கு முன்னேற  ஆஸ்திரேலியா அணிக்கு 57.3 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அரை இறுதிக்கு முன்னேற ஆப்கானிஸ்தான் அணியானது அணி வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். 

ஒருவேளை, ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தால்,  ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினாலே போதும் என்பதால், அரை இறுதிக்கு ஆப்கானிஸ்தான் முன்னேற 37.5 சதவீத வாய்ப்பு உள்ளது.

அரை இறுதிக்கு வங்கதேச அணி முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோல்வி அடைய வேண்டும். வங்கதேசம், ஆப்கானிஸ்தானை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு வங்கதேசம் முன்னேற முடியும். 

ஏற்கெனவே வங்கதேச அணியின் நெட் ரன் ரேட் மிகக் குறைவாக உள்ள நிலையில்,  அரை இறுதிக்கு முன்னேற வங்கதேச அணிக்கு 8.6 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி விட்டன. இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியதாக எடுத்துக் கொள்ளலாம். 

எனவே, ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்க முடியும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...