5 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் - விதிமுறை என்ன தெரியுமா?
1992ஆம் ஆண்டு முதல், 2017ஆம் ஆண்டுவரை 5 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சிக்ஸ் என்ற தொடர் ஹாங்ஹாங்கில் நடைபெற்று வந்தது.
1992ஆம் ஆண்டு முதல், 2017ஆம் ஆண்டுவரை 5 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சிக்ஸ் என்ற தொடர் ஹாங்ஹாங்கில் நடைபெற்று வந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், அனில் கும்ளே, மேஸ்வெல், ஜெயசூர்யா போன்ற ஸ்டார் வீரர்களும் விளையாடி உள்ளனர்.
இந்நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு, இத்தொடர், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இத்தொடர் துவங்க உள்ளது. நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில், இத்தொடரானது ஹாங்ஹாங்கில் நடைபெறும். காலையில் இருந்து, மாலை வரை என மொத்தம் மூன்று நாட்களும் போட்டிகள் நடைபெறும்.
12 அணிகள்
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், ஹாங்ஹாங், நேபால், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 12 அணிகளும் பங்கேற்க உள்ளது.
5 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில், ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட வேண்டும். விக்கெட் கீப்பரை தவிர்த்து, மற்ற 5 வீரர்களும் பந்துவீசியாக வேண்டும். இத்தொடரில், இந்தியா பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியானது, பஹீம் அஷ்ரப் தலமையிலான வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், ஆசிப் அலியும் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி, 2005ஆம் ஆண்டில் இத்தொடரில் கோப்பை வென்றிருக்கிறது. இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளும் இத்தொடரில் கோப்பை வென்றிருக்கிறது.
விதிமுறை
ஒரு அணியில் 6 வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில், விக்கெட் கீப்பரை தவிர்த்து 5 வீரர்கள் பந்துவீச வேண்டும். ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்பட வேண்டும். ஒயிட் மற்றும் நோபாலுக்கு ஒரு ரன்னுக்கு பதில், 2 ரன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 பேட்டர்கள் ஆட்டமிழந்துவிட்டால், கடைசி பேட்டர் களத்தில் பேட்டிங் செய்யலாம். கிட்டதட்ட, கடைசி பேட்டர், கிராமத்து கிரிக்கெட்டர் போலதான் இருப்பார். ஒரு ரன்னை எடுத்தால், மீண்டும் அவரே போய், பேட்டிங் செய்ய வேண்டும்.
ஒரு வீரரால், 31 ரன்னை மட்டும்தான் அடிக்க முடியும். 31 ரன் எடுத்த உடனே, டிக்ளேர் ஆகிவிட வேண்டும். 5 பேட்டர்களும் ஆட்டமிழந்தப் பிறகு, 31 ரன் எடுத்த பேட்டர் களமிறங்கி விளையாட முடியும்.