ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி சமநிலையில் முடிந்தால் என்ன நடக்கும்? 

சர்வதேச கிரிக்கெட்டில் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியென்றால் அது தென்னாப்பிரிக்கா அணி தான்

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா போட்டி சமநிலையில் முடிந்தால் என்ன நடக்கும்? 

உலகக்கோப்பை இறுதி அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த  ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தால், என்ன நடக்கும் என பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியென்றால் அது தென்னாப்பிரிக்கா அணி தான். 1992 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பெய்த மழை காரணமாக, ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று வித்தியாசமான இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு வழங்கப்பட்டது.

இதுவரை பலமுறை தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு வந்தாலும், ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை.  1999 உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 2 பந்தில் இரு பவுண்டரிகள் விளாசியதால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. 

ஆனால் அடுத்ததாக எதிர் வீரர் ஓடி வந்ததை கவனிக்காமல் க்ரீஸிலேயே நிற்க ரன் அவுட் செய்யப்பட்டது.  நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இடையே மழை பெய்தால், தென்னாப்பிரிக்காவுக்கு எதாவது பாதிப்பு இருக்குமா? என்று பார்க்கலாம்.

இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் ஆட்டம் ரிசர்வ் டே-வுக்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகளை ஐசிசி ஏற்கனவே செய்துள்ளது. அதேபோல் ஆட்டம் சமனில் முடிவடைந்தாலும், சூப்பர் ஓவர் மூலமாக வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படுவர்.

ஒருவேளை சூப்பர் ஓவரிலும் சமன் ஏற்பட்டால், மற்றொரு சூப்பர் ஓவர் விளையாடப்படும். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு மழை காரணமாக எந்த பாதிப்பும் இருக்காது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp