ரோகித் சர்மா எடுத்த அதிரடி தீர்மானம்... மீண்டும் கேப்டனாக கோலி? பிசிசிஐக்கு வேறு வழியில்லை!

மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் சர்மா எடுத்த அதிரடி தீர்மானம்... மீண்டும் கேப்டனாக கோலி? பிசிசிஐக்கு வேறு வழியில்லை!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலக  உள்ளனர்.

இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய டி20 மற்றும் ஒரு நாள் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அணியில் இடம்பெறாததால் சூரியகுமார் யாதவ் டி20 அணி கேப்டன் ஆகவும் கே எல் ராகுல் ஒரு நாள் அணி கேப்டனாகவும் ரோகித் சர்மா டெஸ்ட் அணி கேப்டன் ஆகவும் செயற்படுகின்றனர்.

பாகிஸ்தான் சாதனையை உடைத்த இந்தியா.. வரலாற்றிலேயே முதலிடம்... டி20 போட்களில் அதிக வெற்றி!

அடுத்த ஆண்டு டி20க்கு டெஸ்ட் போட்டிக்கும் தான் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். எனவே, 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக இடம் பெற வேண்டும் என்பதால் அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை துறக்க முடிவெடுத்திருக்கிறார்.

இதனால் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளலாம் என ரோகித் சர்மா முடிவு எடுத்திருப்பதாகவும், டெஸ்ட் அல்லது டி20 என இரண்டிலும் ஏதேனும் ஒன்றில் தான் தம்மால் தொடர முடியும் என்றும் பிசிசிஐயிடம் ரோகித் சர்மா திட்டவட்டமாக கூறிவிட்டார் என  தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் கேப்டனாக செயல்பட முடியாது என்ற காரணத்தினால் டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலி எடுத்துக்கொண்டு கேப்டனாக செயல்பட்டால் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்க முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எனினும் விராட் கோலி இதற்கு சம்மதிப்பாரா இல்லையென்றால் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அல்லது பும்ரா போன்ற இளம் வீரர்கள் கேப்டன்கள் வருவார்களா என்பதுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp