இறுதிபோட்டி பாதிக்கப்பட்டால் யாருக்கு கோப்பை? சூப்பர் ஓவர் விதிமுறை என்ன தெரியுமா?

இந்த போட்டி "டை" ஆனால் உலகக்கோப்பை யாருக்கு வழங்கப்படும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. 

இறுதிபோட்டி பாதிக்கப்பட்டால் யாருக்கு கோப்பை? சூப்பர் ஓவர் விதிமுறை என்ன தெரியுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி நடைபெற உள்ள பிட்ச் மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த போட்டி "டை" ஆனால் உலகக்கோப்பை யாருக்கு வழங்கப்படும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. 

ஆனால், இந்த இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில், நாளை ( 30) ரிசர்வ் நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த போட்டி இன்று நடத்தி முடிக்கப்படாவிட்டால், நாளை தொடர்ந்து நடத்தப்படும். மேலும், இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறைந்த பட்சம் 10 ஓவராவது பேட்டிங் செய்திருந்தாலே முடிவு அறிவிக்கப்படும். 

இடையே மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தப் போட்டியில் வெற்றியாளர் என யாரையும் அறிவிக்க முடியாது. போட்டி டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும். 

ஒருவேளை மழையால் சூப்பர் ஓவரை நடத்தி முடிக்க முடியாவிட்டாலும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டால், இரண்டு அணிகளுக்கும் உலகக்கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். 

வேறு எதன் அடிப்படையிலும் வெற்றியாளர் என ஒரு அணியை மட்டும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp