மழையால் போட்டி ரத்தானால் அரை இறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? விரிவான தகவல்!
இன்றைய போட்டிக்கு முன்னதாக மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகல் கோப்பை தொடரின் இன்று நடக்கவுள்ள சூப்பர் 8 சுற்று போட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இன்றைய போட்டிக்கு முன்னதாக மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை செய்தால் ஆடுகளம் கடுமையாக பாதிக்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்த வாய்ப்புள்ளது. மைதானத்தின் மழை நீர் தேங்கி அகற்ற முடியாமல் போனால் போட்டி கைவிடப்படும்.
முன்னதாக, இந்த காரணத்துக்காக மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.
இதனைபோல, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த இரண்டு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றில் இதுவே கடைசி போட்டியாகும். புள்ளிகளை வைத்துத்தான் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் இடம் தீர்மானிக்கப்படும்.
இந்த நிலையில், போட்டி கைவிடப்பட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதன் மூலம் இந்த பிரிவின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கும்.
ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகளை பெறுவதுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி மொத்தமாக நான்கு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிடும்.
அதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை வங்கதேச அணி வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும்.
எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். எனவே, மழையால் இந்த போட்டி கைவிடப்பட்டாலும் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தாலும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவது உறுதி.