10 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணியில் மிகப் பெரிய ரிஸ்க்... சிக்கலில் ரோஹித்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது. 

10 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணியில் மிகப் பெரிய ரிஸ்க்... சிக்கலில் ரோஹித்!

இந்திய அணியின் மூன்று சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக விளங்கிய விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் இல்லாமல் கடந்த 10 வருடங்களில் இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

கடந்த 12 வருடங்களாக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரில் ஒருவராவது அணியில் இடம் பெற்று வந்துள்ளனர். 

மிகச் சில போட்டிகளில் விராட் கோலி விலகிய போது,  அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டுள்ளார். அதே போல புஜாரா மற்றும் ரஹானே நீக்கப்பட்ட போது விராட் கோலி அணியில் இடம் பெற்று வந்தார். 

அவர்களில் மூவரில் இருவராவது ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்று வந்த நிலையில், ரஹானே, புஜாராவை கடந்த ஓராண்டாக இந்திய அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்து வருகின்றது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருவருமே இடம் பெறவில்லை என்றாலும், கோலி அணியில் இருந்தார், அதனால், இந்திய அணி, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் சமாளித்து வெற்றியும் பெற்றது.

தற்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 25 முதல் துவங்க உள்ளது. 

இந்த நிலையில், விராட் கோலி தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் அணியில் இருந்து விலகிய நிலையில், 12 ஆண்டுகள் கழித்து மூன்று அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை கேப்டன் ரோஹித் சர்மா ஏற்று இருக்கிறார் . 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp