விராட் கோலி ஓய்வு எப்போது? அவரது ராசி என்ன சொல்கின்றது - இதுவரை நடந்தது இனியும் நடக்குமா?
விராட் கோலி ஏற்கெனவே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார்.
விராட் கோலி ஏற்கெனவே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி எப்போது கிரிக்கெட்டிற்கு முழுமையாக முழுக்கு போடுவார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலியின் ராசியை ஆராய்ந்து ஜோதிடர் ஒருவர் 2016 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் விராட் கோலி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்குவார் என்றும் 2017 -18 ஆம் ஆண்டு இறுதியில் விராட் கோலிக்கு திருமணம் ஆகும் என்றும் அவர் கணித்திருந்தார்.
இதேபோன்று விராட் கோலிக்கு பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு குழந்தை பாக்கியம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவை சந்திப்பார் என்றும் அதன் பிறகு மீண்டும் அவர் உச்சத்தை அடைவார் என்றும் அந்த ஜோதிடர் சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் அந்த ஜோதிடர் இனி விராட் கோலி வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்று சொல்லி இருக்கின்றார்.
விராட் கோலி 2025 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஜொலிப்பார் என்றும் கோலியின் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் 2025-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2027 ஆம் தேதி வரை கொஞ்சம் தடுமாற்றமான காலமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிப்ரவரி 2027 ஆம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் உச்சத்தை தொடும் என்றும் மார்ச் 2028 ஆம் தேதி மிகப்பெரிய சாதனை உடன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனால் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விராட் கோலி வென்று சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.