ஓய்வு எப்போது? முடிவு யார் கையில்? உண்மையை உடைத்த தோனி.. என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஓய்வு எப்போது? முடிவு யார் கையில்? உண்மையை உடைத்த தோனி.. என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெறப் போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து யூடியூப் சேனலில் தோனி கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஓய்வு தொடர்பல் பதில் அளித்த தோனி, இப்போது தான் ஓய்வு பெறப்போவதில்லை என்றும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், தான் இந்த விஷயத்தில் எளிதாக முடிவு எடுப்பதாகவும், கூறியுள்ளார். 

இப்போது 43 வயதாகும் தனக்கு, 2025 ஐபிஎல் முடியும் போது 44 வயதாகி இருக்கும் என்றும், அதன் பிறகு நான் விளையாட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய தன்னிடம் பத்து மாதங்கள் இருக்கும் என்றும் கூறினார்.

எனவே அது தன்னுடைய முடிவு அல்ல எனறும், தனது உடலின் முடிவு என்றும், ஒரு வருடத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறி உள்ளார்.

இதேவேளை, தான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடியது பற்றி பேசிய அவர், இந்தியாவுக்காக விளையாடுவேன் என நினைத்துப் பார்க்கவே இல்லை. என்றும், தான் அப்போது ராஞ்சியில் வசித்து வந்த நிலையில், முன்பு அது பீகாராகவும், இப்போது அது ஜார்கண்டாகவும் இருக்கிறது. 

அங்கு கிரிக்கெட் குறித்த வரலாறே இல்லை. நான் படித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவுக்காக விளையாடுவேன் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. பள்ளியில் படித்தபோது டென்னிஸ் பந்தில் விளையாடுவோம். அப்போது நான் பவுலிங் செய்வேன். 

இளம் வயதில் மெலிந்து இருந்ததால் என்னை எப்போதும் விக்கெட் கீப்பிங் செய்யுமாறு சொல்வார்கள். நான் என்னை விட மூத்த வயது உடையவர்களுடன் தான் அதிகம் விளையாடினேன். 

மூத்த வீரர்களுடன் விளையாடுவது எனக்கு உதவி செய்தது. அது மட்டும் இன்றி எனது தந்தை மிகவும் நேரத்தை கடைபிடிப்பவர். நானும் எனது தந்தையை போலவே மாறினேன் என்றார் தோனி குறிப்பிட்டுள்ளார்.