அரையிறுதிக்கு செல்ல போட்டி போடும் மூன்று அணிகள்... தகுதி பெற யார் என்ன செய்ய வேண்டும்?

2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அரையிறுதிக்கு செல்ல போட்டி போடும்  மூன்று அணிகள்... தகுதி பெற யார் என்ன செய்ய வேண்டும்?

2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

இப்போது கடைசி இடத்தைப் பிடிக்க மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது.  நியூசிலாந்து, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய  மூன்று அணிகளும் தகுதிபெற கூடிய நிலையில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது என்று வாங்க பார்க்கலாம்.

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை... அரையிறுதிக்கு தகுதிபெறுமா நியூசிலாந்து? 

நியூசிலாந்து அணியின் நிலை

புள்ளி பட்டியலின் அடிப்படையில் தற்போது நான்காவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. இருப்பினும் மொத்தமாக 8 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே புள்ளியில் உள்ளன. 

ரன் ரேட் அடிப்படையில் (0.398) நியூசிலாந்து அணி முன்னிலையில் இருப்பதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான அதிக வாய்ப்புகள்  உள்ளன. எனவே, தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து பெரிய வெற்றியைப் பெற்றால், அரையிறுதிக்கு செல்வது நிச்சயம்.  

அது மட்டுமில்லாமல் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு முன்னேறலாம். ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெரிய வெற்றியைப் பெறாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான்.

இதேவேளை, நியூசிலாந்து தனது கடைசி ஆட்டத்தில் தோற்றால் சிக்கல் ஏற்படும், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடைசி போட்டிகளில் தோல்வியடைந்தால் நியூசிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாகிஸ்தான் அணியின் நிலை

 பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் மற்றும் 0.036 ரன் ரேட்டுன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு இணையாக வெற்றி எண்ணிக்கையில் இருந்தாலும் ரன் ரேட்டில் பின்னுக்கு உள்ளது.

பாகிஸ்தான் தனது கடைசி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாட உள்ளதுடன், இங்கிலாந்தின் அண்மைய விளையாட்டை பார்த்தால்  பாகிஸ்தானுக்கு வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்காது. பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு நிச்சயமாகும்.

எனினும், இந்த போட்டியில் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியடைய வேண்டும். 

பாகிஸ்தான் அணி தோற்றால், நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக அபாரமான வித்தியாசத்தில் தோற்று, ஆப்கானிஸ்தானும் தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணியின் நிலை

8 ஆட்டங்களில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. ரன் ரேட் (-0.338) மிகவும் குறைவாக இருந்தாலும். தனது கடைசி போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.

ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு வர முடியும். அத்துடன், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அந்தந்த கடைசி போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்காவை அபாரமான வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்த வேண்டும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp