விராட் கோலியின் இடத்துக்கு வர 4 பேருக்கு வாய்ப்பு... குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகும் நிலையில் திடீரென்று முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.
இதனையடுத்து, மாற்று வீரராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது.
விராட் கோலி இடத்தில் யார் விளையாட அதிக வாய்ப்பு உள்ளவர்களில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் சதம் அடித்து அபாரமாக விளையாடி இருக்கிறார்.
திடீரென்று இந்திய அணியிலிருந்து விலகிய கோலி.. இதுதான் காரணமா? நடந்தது என்ன?
ரஞ்சி கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் சர்பிராஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்பிராஸ்கான் ரஞ்சிப் போட்டியில் பல சதங்களை அடித்திருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
நடப்பு ரஞ்சி போட்டிகளில் புஜாரா சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அனுபவ வீரர் ஒருவர் அணிக்கு தேவை என்பதால் புஜாராவுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
இதேவேளை, கேஎல் ராகுலை வெறும் பேட்ஸ்மனாக விளையாட வைத்துவிட்டு விக்கெட் கீப்பருக்கு கே எஸ் பரத் அல்லது துருவ் ஜுரல் ஆகியோரை பிளேயிங் லெவனில் கொண்டு வரலாம் என்று பிசிசிஐ யோசனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.