சென்னை அணியிலிருந்து பதிரானா நீக்கப்பட்டது ஏன்? வெளியான காரணம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி உள்ளதுடன், இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரான தான். 

சென்னை அணியிலிருந்து பதிரானா நீக்கப்பட்டது ஏன்? வெளியான காரணம்!

சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி உள்ளதுடன், இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரான தான். 

மலிங்க போல் பந்து வீசும் பதிரான, சிஎஸ்கே அணியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக விளங்கினார். பதிரானா எப்போதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறாரோ, அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. 

இந்த சூழலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பதிரான காயம் காரணமாக பாதியில் விலகினார். இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது. 

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட பதிரானா, பிளேயிங் லெவனில் பதிரானா இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆனால் இதற்கு காரணம், பதிரான கடந்த சீசனின் போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினாலும், அவர் பழைய மாதிரி பந்து வீசவில்லை. 

மேலும் பதிரானா தன்னுடைய பந்துவீச்சு ஸ்டைலில் சில மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் அவருடைய பவுலிங் பழைய மாதிரி இல்லை.

சிஎஸ்கே அணி நடத்திய பயிற்சி ஆட்டத்திலும் பதிரான, அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக பதிரான மீண்டும் பழைய மாதிரி பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. 

ஆஸ்திரேலிய வீரர் நாதன் எலிஸ் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டால் அவர் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.