பாகிஸ்தான் பார்த்த வேலை... இங்கிலாந்தை வீழ்த்த இப்படியொரு திட்டமா?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை ஒரே பிட்ச்சில் பாகிஸ்தான் நடத்தி உள்ளமை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

பாகிஸ்தான் பார்த்த வேலை... இங்கிலாந்தை வீழ்த்த இப்படியொரு திட்டமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறையற்ற வேலை ஒன்றை செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை ஒரே பிட்ச்சில் பாகிஸ்தான் நடத்தி உள்ளமை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

குறுக்கு வழியில் பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணியை வீழ்த்த திட்டமிட்டு உள்ளதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று  டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதுடன், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதால், ஒழுங்காக ஆடாத மூத்த வீரர்களை பாகிஸ்தான் அணி, நீக்கியதுடன், முதல் போட்டி நடந்த அதே பிட்ச்சை இரண்டாவது போட்டிக்கும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. 

பொதுவாக டெஸ்ட் போட்டியின் பிட்ச் நாள் ஆக, ஆக அதிக விரிசல்களுடன் இருக்கும் என்பதால், முதல் டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களும் நடைபெற்ற நிலையில் அந்தப் பிட்ச் அதிக விரிசல்களுடன் உள்ளது.

இந்த நிலையில், அதே பிட்ச்சில் இரண்டாவது போட்டியில் விளையாடினால் அந்த விரிசல்களின் உதவியுடன் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து வீரர்களை திணற வைக்கலாம் என்ற பாகிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

அதற்காக இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியில் ஒரே ஒரு வேகப் பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்து, நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி களமிறக்கி உள்ளது.

எனினும், இங்கிலாந்து அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளது. 

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்திய அதே பிட்ச்சை பயன்படுத்தி சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டு உள்ளமை சரியான முடிவு தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp