இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடைபெறும் நட்சத்திர வீரர்... அடுத்த கேப்டன் யார்? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ!

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவர் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடைபெறும் நட்சத்திர வீரர்... அடுத்த கேப்டன் யார்? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ!

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவர் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

கடைசியாக இந்திய அணி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி போட்டியில் இருந்து தாமாகவே விலகி இருந்தார்.

அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் தாமாகவே விலகிய நிலையில், ரோஹித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பில் கேள்வி எழுந்தது.

இதனையடுத்து, ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்படுவார் என சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ தெரிவித்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா தாமாகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் இனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், இங்கிலாந்து அணியுடன் மோதும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் போது தேர்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகினால் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் மூத்த வீரரான விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது உறுதி என்றாலும், அவரும் கேப்டன் பதவியை பெற மாட்டார் என தெரிகிறது.

அத்துடன், தற்போது காயத்தில் சிக்கி உள்ள பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடுவாரா என்றும் தெரியவில்லை. இந்த நிலையில், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.