கடைசி 2 டெஸ்ட்டில் அஸ்வின் இருப்பாரா? பிசிசிஐ கொடுத்த விளக்கம்... இதுதான் ரோஹித் முடிவாம்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன், ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்கள் இலக்கை அடைய, 10 விக்கெட்கள் மட்டுமே தேவைப்பட்டது.
முதல் இரண்டு டெஸ்ட்களில் அவரால் இதனை செய்ய முடியவில்லை. மூன்றாவது டெஸ்டில் ஒரு விக்கெட்டை எடுத்து, 500 விக்கெட்கள் கிளப்பில் இணைந்தார்.
அஸ்வின் எப்போதுமே, இடது கை பேட்டர்களுக்கு எதிராக முரட்டு தனமாக பந்துவீசக் கூடியவர். தட்டையான பிட்ச்களில் கூட இடது கை பேட்டர்களை அசால்ட்டாக வீழ்த்தக் கூடியவர்.
அவர் வீழ்த்திய 500 விக்கெட்களில் 250 விக்கெட்கள் இடது கை பேட்டர்களுடையது. எந்த வீரரும் இத்தனை இடது கை விக்கெட்களை சாய்த்தது கிடையாது.
மூன்றாவது டெஸ்டில், ஒரு விக்கெட்டை எடுத்து, 500 விக்கெட்களை கைப்பற்றியப் பிறகு, அஸ்வின் வீடு திரும்பினார்.
ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரெகார்ட்டும் காலி... இந்திய வீரரால் அதிர்ச்சியில் இங்கிலாந்து ஜாம்பவான்
அவர் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீடு திரும்பிய அவர், நான்காவது நாள் ஆட்டத்தில் இணைந்தார்.
4ஆவது நாளில் அணிக்கு திரும்பிய அஸ்வின், அவ்வளவாக சரியாக பந்துவீசவில்லை. டாம் ஹர்ட்லி விக்கெட்டை தான் எடுத்தார்.
அதுவும், இன் சைட் எட்ஜ் ஆனதால்தான், அந்த விக்கெட்டும் கிடைத்தது. இதன்மூலம், அஸ்வின் இன்னமும் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில், அஸ்வின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்பாரா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒருவேளை, நான்காவது டெஸ்டில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டால், கடைசி போட்டியில் அஸ்வினுக்கு ஓய்வு வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்க உள்ளது.
5ஆவது டெஸ்ட் போட்டி, மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் ஆரம்பிக்க உள்ளது.