இந்திய அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா... ஜெய் ஷா அதிரடி
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணியின் கேப்டன் ரோகஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, இந்திய டி20 அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம் பெறப்போவது உறுதியாகி உள்ளதுடன், இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ளார். நேரடியாக ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்று சொல்லாவிட்டாலும் சூசகமாக கூறி இருக்கிறார்.
"இந்திய அணியின் கேப்டனை தேர்வுக் குழுவினர்தான் தேர்வு செய்ய வேண்டும். ஹர்திக் பாண்டியா ஃபார்ம் மோசமாக இருப்பதாக முன்பு கூறினீர்கள். ஆனால், தேர்வு குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை அணியில் தேர்வு செய்தனர். அவர்களது நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார்." என்றார் ஜெய் ஷா.
எனவே, ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என சொல்லாவிட்டாலும், அந்த கேள்விக்கு அவரைப் பற்றி நல்லவிதமாக பேசியதன் மூலம் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிசிசிஐ உயர் அதிகாரிகள் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெய் ஷாவின் முடிவும் அதில் நிச்சயம் இருக்கும்.
அந்த வகையில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக வர அதிக வாய்ப்பு உள்ளது.