17 ஆண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி... காய் நகர்த்திய ரோகித்!
இஷாந்த் சர்மாவை தவிர வேறு எவருமே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்கேற்றது கிடையாது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் நடைபெறவே இல்லை.
இரு அணிகளும் தற்போது உலகக்கோப்பை தொடர்களில் தான் மோதி வருகின்றன.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கூட சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை.
இஷாந்த் சர்மாவை தவிர வேறு எவருமே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்கேற்றது கிடையாது.
இந்த நிலை மாற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாஹனுடன் இணையத்தில் உரையாடல் நடத்தினார்.
அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றார்.
அது நிச்சயமாக நடைபெறும் என நான் நம்புவதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் நன்மைக்காக இரு அணிகளும் இணைந்து வெளிநாடுகளில் விளையாடினால் இன்னும் சிறப்பான அம்சமாக இருக்கும் என்று கூறினார்.
அந்நிய மண்ணில் போட்டியில் நடத்தும் போது அது பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும் என்றும் இரு அணிகளுக்குமே அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். ஆனால் அது பெரிய விடயமே கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட் போன்ற உண்மையான கிரிக்கெட்டில் இந்த போட்டி நடைபெற வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.