பதறியடித்து வந்த இஷான் கிஷன்.... பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி... என்ன நடந்தது?
அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறி பிசிசிஐ பயமுறுத்தியது.
ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் இந்திய வீரர்கள் பலரும் தங்களுடைய உடல் தகுதியை கருத்தில் கொண்டு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க தொடரில் மனம் சோர்வு காரணமாக இசான் கிஷன் அணியில் இருந்து விலகிய நிலையில், இந்திய அணி மாற்று விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாறி வருகின்றது.
இஷான் கிஷன் அணிக்கு திரும்புவார் என்று பார்த்தால் அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் கடுப்பான பிசிசிஐ, எந்த ஒரு வீரரும் இனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் ரஞ்சி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி நேற்று ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது.
திரும்பி வந்த ஜடேஜா.. இரண்டு பேருக்கு வந்த ஆப்பு... சிக்கலில் ரோகித் சர்மா!
அத்துடன், அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறி பிசிசிஐ பயமுறுத்தியது.
இதனையடுத்து, இசான் கிசன் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிவெடுத்து உள்ளதுடன், வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜார்க்கண்ட் அணியின் கடைசி ரஞ்சிப் போட்டியில் விளையாடும் அளவுக்கு இன்னும் உடல் ரீதியில் தயாராகவில்லை என கூறியிருக்கிறார்.
இதன் காரணமாக டிஒய் பட்டேல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று தன்னுடைய உடல் தகுதியை பிசிசிஐ நிர்வாகிகளிடம் நிரூபிக்க இருப்பதாக இசான் கிஷன் கூறியுள்ளார்.
பிசிசிஐயின் எச்சரிக்கை காரணமாக தற்போது முன்னணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி பக்கம் திரும்பி இருப்பது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஞ்சிப் போட்டியில் திறமையை காட்டுவோருக்கே அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.