மீண்டும் இணையும் சஜித்-ரணில் கூட்டணி?

கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில், கட்சியின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

மீண்டும் இணையும் சஜித்-ரணில் கூட்டணி?

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கான யோசனைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில், கட்சியின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

செயற்குழு கூட்டத்தின் பின்னர் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, சஜித் பிரேமதாச மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் தலைமையில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு இரு கட்சிகளைச் சேர்ந்த பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp