இக்கட்டான நிலையில் ரோஹித்... பும்ரா திடீர் ஓய்வு? அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. 

இக்கட்டான நிலையில் ரோஹித்... பும்ரா திடீர் ஓய்வு? அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. 

இந்திய அணியின் அஸ்திவாரமாக இருக்கும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

பும்ரா பந்து வீசும் முறையால் அவருக்கு காயம் ஏற்படக் கூடும் என்பதாலும் நீண்ட தொடரின் இடையேயும் ஓரிரு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில், கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பும்ரா மட்டுமே ஒரு ஓவருக்கு சராசரியாக இரண்டு ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

எனவே, பும்ராவை பிளேயிங் லெவனில் ஆட வைத்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. எனினும், இந்திய அணி தகவலின் படி பும்ரா இந்தப் போட்டியில் விளையாடவே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சிவம் துபேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன், அதனை தவிர அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp